அஜித்தின் வலிமைக்கா இந்த நிலைமை சோகத்தில் மூழ்கிய அஜித் ரசிகர்கள்.

ajith
ajith

தல அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பைக் ரேஸ் காட்சிகள, கார் ரேஸ் காட்சிகள் படத்தில் இடம்பெறும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதால், பல திரைப்படங்களுக்கு சோதனை காலம் ஏற்பட்டுள்ளது, அதேபோல் அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கும் சோதனை காலம் தான். அஜித்தின் வலிமை திரைப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார்கள்.

இந்தக் கொரோனா வைரஸ் பாதிப்பால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது, வலிமை திரைப்படத்தின் ஒரு சண்டை காட்சி ஸ்பெயினில் எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்னும் பாதி படப்பிடிப்புகள் வெளிநாட்டில் தான் எடுக்கப்பட இருக்கின்றன.

ஆதனால் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் படக்குழு தவித்து வருகிறது, உலகமே இருளில் சூழ்ந்து இருப்பதால் இன்னும் இரண்டு மாதத்திற்கு வலிமை படத்தின் படப்பிடிப்பு நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளார்கள், இனி வருகின்ற ஜூன் மாதம் தான் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம்.

ஆனால் ஜூன் மாதத்திற்கு மேல் படப்பிடிப்பை தொடங்கினால் வருகின்ற தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஏனென்றால், ஒரு படத்திற்கு போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தான் அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும். இந்த நிலையில் ஜூன் மாதம் படப்பிடிப்பை ஆரம்பித்தாள் வலிமை தீபாவளிக்கு வாய்ப்பில்லை அதன்பிறகு பொங்கலுக்கு தான் என்ற நிலை ஆகிவிடும்.

இதனால் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறார்கள். சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு வலிமை திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்தால் கூட சந்தோசம் தான்.