தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கொரனோ பிரச்சினை முடிந்த பிறகுதான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதுமட்டுமல்லாமல் தல அஜித் இனி கொரோனா பிரச்சனை முற்றிலும் முடிந்த பிறகு படத்தை எடுக்கலாம் என திட்டவட்டமாக கூறி விட்டாராம்.
ஆனால் கொரோனா பிரச்சனை தற்போதைக்கு முடிவது போல் தெரியவில்லை, அப்படியிருக்கும் நிலையில் வலிமை திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என தகவல் கிடைத்தது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஒரு பிரமாண்ட சண்டைக் காட்சி வெளிநாட்டில் தான் எடுக்க வேண்டுமா.
ஆனால் கோரனோ இருப்பதால் வினோத் இந்தியாவிலேயே இந்த காட்சியை எடுக்கலாம் என முடிவு செய்து லோக்கேஷன் தேடினாலும் ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு இடமே கிடைக்கவில்லையாம் அதனால் இந்த காட்சியை எப்படி எடுப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி குழப்பத்தில் இருக்கிறாராம்.
அஜித் படம் என்றாலே சண்டைக்காட்சிகள் மரண மாஸ் ஆக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், அதனால் கண்டிப்பாக இந்த சண்டைக்காட்சி வெளிநாட்டில் எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்களாம்.