இணையதளத்தில் லீக் ஆன வலிமை திரைப்படத்தின் போஸ்டர் இதுதானா? இல்லை ரசிகர்கள் உருவாக்கியதா.? இதோ புகைப்படம்

ajith-HBD-tamil360newz

Ajith valimai fan made Poster : தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் படத்தில் பைக் ரேஸ் காட்சிகளும் கார் ரேஸ் காட்சிகளும் இடம் பெறும் என சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதனால் அனைத்து படப்பிடிப்புகளும் படத்தின் ரிலீஸ்சும் என அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது, இந்த நிலையில் அஜித்தின் பிறந்தநாள் மே 1 ஆம் தேதி என அனைவருக்கும் தெரியும்.

அதனால் மே 1ம் தேதி படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள், ஆனால் அஜித் தன்னுடைய காமன் டிபியையே பல பிரபலங்களை வெளியிட வேண்டாம் என கூறினார் அதனால் வலிமை திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வராது என தெரிகிறது, அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தயாரிப்பு நிறுவனம் தற்போது நிறைவேற்றுவதாக தெரியவில்லை.

இந்த நிலையில் ரசிகர்கள் படக்குழு வெளியிடுகிறார்களோ இல்லையோ நாங்கள் ஆரம்பித்து விட்டோம் என வலிமை திரைப்படத்தின் ஒரிஜினல் போஸ்டரை மிஞ்சும் வகையில் சில போஸ்டர்கள் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். அந்த போஸ்டர் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.

மேலம் அந்த போஸ்டரில் தல அஜித் செம அம்சமாக போஸ் கொடுத்துள்ளார், அதுமட்டுமில்லாமல் தல அஜித்தின் சூட்டிங் புகைப்படம் மற்றும் புதிய புகைப்படங்கள் என அனைத்தையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

valimai first look -tamil360newz
valimai first look -tamil360newz