கிழிஞ்ச சட்டை… பிஞ்ச செருப்பு… யாராவது என்னை மதிப்பார்களா ஆனால் அஜித் என் வழக்கையையே மாற்றினார்.! கண்கலங்கிய இயக்குனர்.!

ajith-latest-news-tamil360newz
ajith-latest-news-tamil360newz

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், வசூல் மன்னனாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வளம் வருகிறார், இவர் தற்பொழுது தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது ஆனால் படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, படத்தின் டைட்டிலை தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியானால் அஜித் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

அஜித்தை பற்றி பல பிரபலங்கள் பேட்டியில் கூறியதை நாம் கேட்டிருப்போம், அஜித்தை சினிமா பிரபலங்களுக்கு மிகவும் பிடிக்கும், அதேபோல் அஜித்தை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், வலிமை படத்தில் அஜித்தை பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும் ரசிகர்களுக்கு புல்லரித்து விடும். அவ்வளவுதான் அந்த செய்தி தான் அன்று டிரெண்டிங்கில்.

அந்த வகையில் தல அஜித் பல இயக்குனர்களை தனது திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார், அந்த வகையில் மிகவும் ஏழ்மையில் கிழிந்த சட்டையுடன் பிஞ்ச செருப்புடன் வாய்ப்பு கேட்ட இயக்குனருக்கு வாழ்க்கை கொடுத்தவர் தான் தல அஜித், அஜீத்தை வைத்து வாலி திரைப்படத்தை இயக்கிய பொழுது எஸ் ஜே சூர்யாவின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாம், அவர் அப்பொழுது சட்டையில் பட்டன் கூட இல்லாமல் பின் குத்திக்கொண்டு பிஞ்ச செருப்புடன்  இருந்தாராம்.

எஸ் ஜே சூர்யாவை இதுபோல் கோலத்தில் பார்த்த பலரும் மதிக்கவே மாட்டார்கள் ஆனால் தல அஜித் இயக்குனர் என்று கூறுவாராம், எஸ் ஜே சூர்யாவை ஒரு இயக்குனராக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் தல அஜித் தான் இதை பல பேட்டியில் எஸ் ஜே சூர்யாவே கூறியுள்ளார். இப்படி யார் என்று கூட தெரியாமல் வாழ்க்கையில் தூக்கி விடுவதால்தான் தல அஜித்தை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

எஸ் ஜே சூர்யாவின் நிலைமை வாலி திரைப்படத்திற்கு பிறகு அப்படியே தலைகீழாக மாறியது, தற்பொழுது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.