நடிகர் அஜித் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு அசைக்க முடியாத நட்சத்திரமாக மாறி உள்ளார். அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 20 நாட்களை கடந்து இப்பொழுதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இதுவரை வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இது ஒருபக்கம் கொண்டிருக்க மறுபக்கம் அடுத்தடுத்த இயக்குனர்களுடன் ஒப்பந்தமாகி இருக்கிறார் அந்த வகையில் 61 வது திரைப்படத்தை மீண்டும் ஹச். வினோத் இயக்கவுள்ளார் 62வது திரைப்படத்தை விக்னேஷ் இப்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் – வடிவேலு ராஜா படத்திற்கு பிறகு நடிக்கவில்லை என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அது குறித்து விலாவாரியாக நாம் பார்ப்போம்.
ராஜா படத்தில் அஜித், வடிவேலு இணைந்து நடித்து இருந்தனர் இந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்று வந்ததாம். ஷூட்டிங் நடைபெறாத சமயத்தில் கூட வடிவேலு அஜித்தை வாடா போடா என கூறி விடுவாராம் அதேபோல படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கும் போதும் இவர் அஜித்தை வாடா போடா என்று கூப்பிடுவார் ஆனால் இயக்குனராக வசனங்களை கொடுக்கவே இல்லையாம் ஆனால் வடிவேலு அஜித்தை அப்படி எல்லாம் பேசினாராம்.
ஆனால் இது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம் மேலும் அஜித்துடன் இருப்பவர் பலர் அஜித்தை எப்படி கூப்பிடாதீர்கள் என கூறியுள்ளனர் அதற்கு வடிவேலு என்னை விட வயதில் சிறியவன் நான் அவரை வாடா போடா என கூறுவதில் என்ன தவறு என கூறியுள்ளார். நீங்கள் அஜித் தம்பி என அழைத்தால் போதும் அதை விட்டுவிட்டு ஏன் இவ்வாறு கூறியுள்ளார் என கேட்டுள்ளனர்.
அதற்கும் தெனாவட்டாக அப்படியெல்லாம் முடியாது என வாடா போடா எனவே கூறியுள்ளார் இருப்பினும் அதை அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டார் அஜித். பிறகு இவருடன் இணைந்து நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து உள்ளார் அஜித்.