தனக்கு பிடித்த இயக்குனரை விலை உயர்ந்த காரில் உட்கார வைத்து ஊர் சுற்றிய அஜித்.! வைரல் புகைப்படம் இதோ.

ajith
ajith

தல அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்திய சமீபகாலமாக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வசூலை வாரி வருகின்றன இதனால் தல ரசிகர்கள் தற்போது சந்தோஷமாக இருக்கின்றனர்.

அஜித் நேர்கொண்டபார்வை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பல வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தாலும் இதுவரை முடிந்தபாடு இல்லாமல் இருப்பது ரசிகர்களை சற்று கவலையடையச் செய்தன.

இருப்பினும் இந்த படத்தில் நடித்தவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த படம் அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய ஒரு பெஸ்ட் படமாக இருக்கும் என கூறுகின்றனர். தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு திருப்பு முனை படமாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர் இதனால் தல ரசிகர்கள் சற்று உற்சாகத்தில் வலம் வருகின்றனர்.

இந்த நிலையில் சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான அசல் திரைப்படத்தின் போது பெரும்பாலான சூட்டிங்கில் வெளிநாட்டில் தான் எடுக்கப்பட்டது.

அப்பொழுது இயக்குனர் சரணை விலை உயர்ந்த காரில் உட்கார வைத்து ஓட்டிச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.