பைக்கை மீண்டும் கையில் எடுத்த அஜித் – இப்போ எங்க இருக்கிறார் தெரியுமா.? வைரல் புகைப்படம்..

ajith
ajith

நடிகர் அஜித்குமார் இயக்குனர் ஹச் வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நடித்து வரும் திரைப்படம் துணிவு இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை  மையமாக வைத்து உருவாக்கி வருகிறது இதனால் இந்த படத்தில் அக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது அதே சமயத்தில் இந்த படத்தில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் அதிகம் இடம் பெறும் என தெரிய வருகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர் படத்தை ரசிகர்கள் வேற லெவலில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இதுவரை இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் போன்ற போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன.

ஏதேனும் அப்டேட் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. துணிவு படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் வெற்றிபெருமாக முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரம் காட்டி வருகின்றன அதன் முடித்த பிறகு நிச்சயம் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது துணிவு திரைப்படம்.

அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகிறது இந்த படத்தை எதிர்த்து விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகிறது. என்பது கூடுதல் தகவல் இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் படப்பிடிப்பை வெற்றி கரமாக முடித்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் பைக் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

ஏற்கனவே அஜித் இந்தியாவை சுற்றி கேதார்நாத், பத்ரிநாத், இமயமலை போன்ற இடங்களில் சுற்றி வந்த நிலையில் தற்போது அஜித் புனே பக்கம் பயணத்தை தொடங்கி இருக்கிறாராம் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புனேவை தொடர்ந்து அஜித் முக்கிய சுற்றுலா தளங்கள் பார்க்க செல்வார் என சொல்லப்படுகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..