தமிழ் சினிமாவில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக உயரத்தில் உள்ள நடிகர் மற்றும் நடிகைகளை புகழ்ந்து பேசினால் ரசிகர்களிடம் அதிக ரீச் ஆகிடலாம் என்பதை வாடிக்கையாக வைத்து வருகிறார்கள் தற்பொழுது உள்ள சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள்.
அந்தவகையில் பெரும்பாலும் அஜித் விஜய் பற்றி இளம் நடிகர் மற்றும் நடிகைகள் பேசி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து விடுகிறார்கள், இந்த நிலையில் பல நடிகர் மற்றும் நடிகைகள் அஜித் பற்றியும் விஜய் பற்றியும் பேசி விட்டால் நன்றாக ரீச் ஆகி விடுவோம் என்பது பலரின் கணக்காக இருக்கிறது.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு பிரபலம் அஜித் பற்றி கேட்டதற்கு சாதாரணமாக பதில் கூறாமல் அவரை கிண்டல் அடிக்கும் விதமாக பதில் கூறியுள்ளார், இந்த கொரனோ காலகட்டத்தில் பல நடிகர் மற்றும் நடிகைகள் நேரடியாக பேட்டி கொடுக்க முடியாமல் ஆன்லைனில் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில் பிக்பாஸில் மிகவும் பிரபலமடைந்த ரைசா அவர்கள் ரசிகர்களுடன் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் கலந்துரையாடியுள்ளார் அப்பொழுது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்தது தலையா அல்லது தளபதியா என கேட்டுள்ளார். அதற்கு ரைசா அவர்கள் சாதாரணமாக பதில் கூறி இருக்கலாம் ஆனால் அப்படிக் கூறாமல் எனக்கு மொட்ட தல தான் பிடிக்கும் என கூறியுள்ளார்.
அதற்கு ரசிகர் ஒருவர் அஜித் மொட்டையடித்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இந்த தலையை என கேட்க நடிகை ரைசா sharp என ட்வீட் செய்துள்ளார் ரைசா.