அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தையால் தான்… சீக்ரெட் உடைத்த பிரபல இயக்குனர்.!

ajith mankatha
ajith mankatha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு ஆக்சன் படமாக வெளியாகியது மங்காத்தா, இந்த திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கினார்.

படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், லட்சுமிராய், அஞ்சலி ஆண்ட்ரியா ஆகியோரும் நடித்திருந்தார்கள், மங்காத்தா திரைப்படம் அஜித்தின் 50வது திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஏதாவது ஒரு படத்தை திரையரங்கில் ஓடுவதுபோல் காமிக்க வேண்டும், அப்பொழுது எந்த திரைப்படத்தை போடலாம் என கேட்டுக் கொண்டிருந்த பொழுது அஜித் அவர்கள் என் தம்பி விஜய் படத்தை போடுங்கள் என கூறியதாக வெங்கட்பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதேபோல் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என்னுடைய நண்பர் அஜித் போல் உடை அணியலாம் என கூறுவார், இந்த வீடியோ வெளியாகி வைரலனதால் அஜித் ரசிகர்கள் அஜித், விஜய் மீது வைத்துள்ள மதிப்பை வழிகாட்டுவதற்காக பழைய வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.

தல அஜித் மற்றும் தளபதி விஜய் இருவரும் நண்பர்களாக இருப்பது பலருக்கும் தெரிந்த உண்மை தான், அதேபோல் தல ரசிகர்களும் தளபதி ரசிகர்களும் ஒன்று இணைந்தால் எதை வேணாலும் சாதிக்கலாம் என்பது உண்மை.