தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெய் இவர் முதன்முதலாக விஜயின் பகவதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் விஜய்யின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது அதுமட்டுமல்லாமல் இதனைத் தொடர்ந்து அவர் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஜெய் சமீப காலமாக தோல்வியை தழுவி வருகிறார். ஜெய் தற்போது பிரேக்கிங் நியூஸ் குற்றம் குற்றமே, காபி வித் காதல் எண்ணித் துணிக ஆகிய திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் விஜய் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்தப் பேட்டியில் பல சுவாரசியமான தகவலை பதிவிட்டுள்ளார்.
அப்பொழுது ஜெய் அவர்கள் கூறியதாவது சென்னை 600028 திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த பொழுது பல புதுமுக இயக்குனர்கள் தன்னிடம் கதை கூறியதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அப்பொழுது அஜித் சார் தன்னிடம் நன்றாக பேசி வந்ததாகவும் கூறியுள்ளார் அப்பொழுதுதான் பல புதுமுக இயக்குனர்கள் சொன்ன கதையை அஜித்திடம் கூறினேன்.
அப்பொழுது அஜித் சார் சுப்பிரமணியபுரம் படத்தின் கதையை கேட்டு விட்டு இது 80களின் உள்ள கதையாக இருப்பதால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று சொல்லி என்னை அந்த திரைப்படத்தில் நடிக்க சொன்னார் அந்த திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனர் சசிகுமாரும் முதன்முதலாக இயக்குனராக அவதாரம் எடுத்தார் அப்பொழுது ஜெயின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக சுப்பிரமணிய திரைப்படம் அமைந்தது.
சுப்பிரமணியம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெய்க்கு பல திரைப்பட வாய்ப்புகள் அமைந்தது அப்படி இருக்கும் நிலையில் ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் அஜித் ஒரு முக்கிய பங்காக இருக்கிறார் அதாவது ஒரு முன்னணி நடிகர் என்னை போன்ற புதுமுக நடிகர்களுக்கு நேரம் ஒதுக்கி எங்களுடைய வளர்ச்சிக்கு உதவியது என்னால் மறக்கவே முடியாது எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜெய் மற்றும் சுந்தர் சி இணைந்து நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் சமீபத்தில் திரையரங்கிற்கு வந்துள்ளது.இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.