Ajith Kumar: கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. அப்படி தற்பொழுது இவர் பிரமாண்டமான நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் இணைந்திருக்கும் நிலையில் எந்த படத்தினை யார் இயக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது சமீப காலங்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து முன்னணி நடிகர்களை விலைக்கு வாங்குவது போல் ஒரு நிலை இருந்து வருகிறது. முன்னணி நடிகர்களுக்காகவும், படத்திற்காகவும் பல கோடியை வாரி வழங்கி வருகின்றனர். அப்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என அடுத்தடுத்து முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
ஆனால் இதுவரை ஒரு முறை கூட சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் விடாமுயற்சி படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க இருக்கும் படத்தினை சன் பிரிக்சஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம்.
இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் இயக்குனர் யார் என்பது தெரியவில்லை. அப்படி முதலில் சிறுத்தை சிவா தான் இந்த படத்தினை இயக்க இருப்பதாக கூறப்பட்டது ஆனால் பிறகு அவரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவலின் படி, அஜித்தின் அடுத்த படத்தை அட்லீ அல்லது நெல்சன் திலீப்குமார் இவர்களில் ஒருவர் இயக்க வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
ஜெயிலர் படத்தின் வெற்றினை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நெல்சன் இணையவுள்ளார். இது குறித்து இதுவரையிலும் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை எனவே விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.