பிரியங்கா திரிவேதி சினிமா உலகில் ஒரு சில படங்களில் நடித்தாலும் அத்தகைய படங்கள் மாபெரும் ஹிட்டடித்த தோடு மட்டுமல்லாமல் அவருக்கு நற்பெயரையும் வாங்கித் தந்தது அதன்கரணமாக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் ஜொலித்தார் பிரியங்கா திரிவேதி இவர் தமிழ் சினிமாவில் ராஜ்யம் என்ற திரைப்படத்தில் விஜயகாந்துடன் ஜோடி போட்டி நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து அவர் அஜித்துடன் இணைந்து ராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் பாவாடை தாவணியில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தார் மேலும் இதனை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி அந்த வகையில் இவர் விக்ரமுடன் இனைந்து காதல் சடுகுடு போன்ற சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவருக்கு அடுத்தடுத்து என்னமோ வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து அவர் பிறமொழி பக்கம் தனது இசையை திருப்பி நடித்து வந்தார் அந்த வகையில் இவர் கன்னடம், பெங்காலி போன்றவற்றிலும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி நடித்து வந்த இவர் திடீரென கன்னட நடிகர் உபேந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.
இதனால் இவரை பெரிதும் இழுந்தது தமிழ்சினிமா என்றே குறிப்பிட வேண்டும் ஏனென்றால் இவர் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வளம் வந்த இவர் சினிமாவில் இருந்து வெளி சென்றது தமிழ் சினிமாவையும் தாண்டி ரசிகர்களைப் பெரிதும் ஆச்சரியப்படுத்தியது.இருப்பினும் சினிமா உலகில் தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் பிரியங்கா திரிவேதி.
இவர் தற்பொழுது ஹௌரா பிரிட்ஜ் என்ற புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இப்படம் கன்னடம் மற்றும் தமிழில் வெளியாக உள்ளது இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர் அதிலும் குறிப்பாக பிக் பாஸ் யாஷிகா ஆனந்த், மகத் போன்ற பலரும் நடிக்கின்றனர் இதன் மூலமாக சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க உள்ளார் இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை காண ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர் மேலும் அவர் தற்பொழுது இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.