முக்கிய இடத்தில் டிக்கெட்டை விற்று தள்ளும் அஜித்தின் “துணிவு” – இதோ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.!

ajith
ajith

நடிகர் அஜித்குமார் அண்மைகாலமாக எந்த ஒரு நடிகருடனும் போட்டி போடாமல் சோலோவாக படங்களை இறக்கவே அதிகம் ஆசைப்படுகிறார் காரணம் தனது தயாரிப்பாளர் லாபத்தை பெற வேண்டும் என்பதற்காக இப்படி செய்து வருகிறார் ஆனால் சில எதிர்பாராத சூழ்நிலைகளால் ஒரு சில நடிகர்களுடன் போட்டி போட வேண்டியதாக போகிறது.

அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது அதே தேதியில் விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகிறதால்  அஜித் – விஜய் படங்கள் மோதுகின்றன. அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாக்கி உள்ளது.

இந்த படத்தில் அஜித்தை நெகட்டிவ் ரோலில் செம்ம சூப்பராக நடித்துள்ளார் என தெரிய வருகிறது. அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் வெளிவர ஒரு மாத காலம் இருந்தாலும்..

மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க துணிவு  படக்குழு தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது அந்த வகையில் கடைசியாக வெளியான சில்லா சில்லா பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது இப்படி ஒரு பக்கம் இருக்க..

மறுப்பக்கம் படத்தின் ப்ரோமோஷன் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது  இந்த நிலையில் UK – வில் அஜித்தின் துணிவு படத்தின் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்து இருக்கிறது  இதனை அதிகாரப்பூர்வமாக லைகா  நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த தகவல் தான் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்..