தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் ஷாலினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள். அதனால் அஜித்தின் திரைப்படம் திரையரங்கிற்கு வந்தால் திரையரங்கமே திருவிழா போல் கோலகாலமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் அஜித் திரைப்படம் வெளியாகும் பொழுது கட் அவுட் பாலபிஷேகம், பட்டாசு, மேல தாளம், என பிரம்மாண்டமாக இருக்கும்.
இதன் நிலையில் அஜித் கடைசியாக வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அடுத்ததாக காசேதான் கடவுளடா என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றது.
அஜித் இந்த திரைப்படத்தில் வில்லன் ரோலில் நடித்துள்ளதாக தகவல் கிடைத்தது அதேபோல் பட குழு துணிவு திரைப்படத்தின் டிரைலரை டிசம்பர் 31ஆம் தேதி 7 மணிக்கு வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார்கள் அதேபோல் நேற்று 31ஆம் தேதி மாலை 7 மணிக்கு ட்ரைலரை பட குழு ஜி ஸ்டூடியோ youtube தளத்தில் வெளியிட்டது. இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த ட்ரைலரில் அஜித் ஒரு பேங்கில் கொள்ளை அடிப்பது போலவும் அங்குள்ள மக்களை பிணைக் கைதியாகப் பிடித்து வைப்பது போலவும் ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சண்டை கப்பல் சேசிங் என பலவிதமாக பல காட்சிகள் இருக்கிறது. இந்த நிலையில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
அப்படி ட்ரெய்லர் வெளியாகி 12:00 மணி நேரத்தில் 13 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இதில் ஒன்பது லட்சத்து 47 ஆயிரம் லைக் கலையும் பெற்று வைரலாகி வருகிறது.