தமிழ் சினிமாவில் அதிக தோல்வி படங்களை கொடுத்த அஜித் கடந்த சில வருடங்களாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நல்ல கதைகளில் நடித்து வெற்றி கண்டு வருகிறார். இவர் கடைசியாக நடித்த “துணிவு” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதை தொடர்ந்து தனது 61 வது படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் படத்தின் பூஜை அண்மையில் போட்டது. வெகு விரைவிலயே சூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் நடிப்பில் 2000ம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.
இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக தபு நடித்திருப்பார் ஆனால் உண்மையில் அஜித்துக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தானாம்.. ஆனால் அவர் சொன்னது.. அஜித்துடன் நடிப்பது பிரச்சனை இல்லை அவர் தாடியை சேவ் செய்ய வேண்டும் எனக் கூறி இருக்கிறார். இதனை அடுத்து இயக்குனர் அஜித்திடம் வந்து இதை சொல்ல..
எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் சரி என்னை மாற்றிக் கொள்ள முடியாது எனக் கூறி தாடி எடுக்க மறுத்து விட்டாராம் பின்னர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க மஞ்சு வாரியார், சௌந்தர்யா போன்ற நடிகைகளிடம் அப்பொழுது அணுக உள்ளனர். கடைசியாக பாலிவுட் நடிகை தபு ஓகே சொல்ல உடனடியாக படம் எடுக்கப்பட்டது.
படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு, அப்பாசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடித்தார். படம் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தாம்.. அஜித் நினைப்பிருந்தால் ஐஸ்வர்யாவராயுடன் நடித்திருக்கலாம் ஆனால் மற்றவர்களுக்காக தன்னுடைய இமேஜை மாற்றிக்கொள்ளாமல் மாஸ் காட்டி உள்ளார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.