அஜித், விஜய்யை எதிர்த்து மோதும் இரண்டு டாப் ஹீரோக்கள் – தீபாவளி ரேசில் ஜெயிக்க போவது யார்.!

ajith and vijay
ajith and vijay

பண்டிகை என வந்துவிட்டால் போதும் மக்கள் புதிய உடைகளை அணிந்து அசத்துவார்கள். ரசிகர்கள் நல்ல நாட்களில் டாப் நடிகர்களின் படங்களை திரையரங்கில் பார்த்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் அந்த வகையில் கடந்த சில வருடங்களாக கொரோனா தாக்கம்.

அதிகரித்ததால் வீட்டிலேயே முடங்கி கிடந்த ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைதி இருக்கிறது வருகின்ற தீபாவளி ஏனென்றால் இந்த தீபாவளியை முன்னிட்டு பல்வேறு டாப் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன மொத்தம் நான்கு திரைப்படங்கள் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளிவர இருக்கிறது.

இதில் முதலிடத்தை எந்த ஹீரோ பிடிக்கும் என்று தெரியவில்லை அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து எந்த ஹீரோ பிடிப்பார்கள் என்பது மிகப்பெரிய ஒரு கேள்வி கூறியாக இருந்து வருகிறது இந்த தீபாவளி ரேஸில் முதலில் அஜித்தின் 62 வது திரைப்படம்  கலந்து கொள்கிறது. அதனைத் தொடர்ந்து தளபதி விஜயின் 66வது திரைப்படமும் இந்த ரேசில் களம் இறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு நடிகர்கள் ஒரே சமயத்தில் மோதும் போது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். இவர்களை தவிர வரயுள்ள தீபாவளி ரேஸில் இரண்டு நடிகர்களின் படங்களும் களமிறங்குகின்றன.  தமிழ் சினிமா உலகில் அசுர வளர்ச்சியை எட்டி உள்ள நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரது அயலான் திரைப்படம் தீபாவளி ரேஸில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்துவர் நடிகர் கார்த்தி. இந்த ரேஸில் கலந்து கொள்கிறார் இவர் நடிப்பில் உருவாகிவரும் சர்தார் படம் இறுதி கட்ட பணிகளை முடித்து உள்ளது இந்த படம் இந்த ரேஸில் கலந்து கொள்வதால் தீபாவளி தினத்தன்று 4 படங்கள் முட்டி மோத ரெடியாக இருக்கின்றனர்.