இன்றைய தமிழ் சினிமாவில் மிகப்பெரிய போட்டியாளர்களாக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய் இருவருமே வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர். கடந்த பொங்கலுக்கு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
உடனே விஜய் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்தார. ஷூட்டிங் முடிந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக படம் ரிலீஸ் ஆக இருக்கிறது அதற்கான வேலைகள் முபாரமாக போய்க் கொண்டிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்து தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அஜித் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பைக் ரைடு சென்று விட்டு இப்பொழுதுதான் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட அஜித், விஜய் ஒரு சூப்பர் ஹிட் படத்தை தவற விட்டுள்ளனர் அது குறித்து பார்ப்போம் இயக்குனர் அகத்தியன் ஒரு கதையை ரெடி செய்து முதலில் விஜய் இடம் கூறி இருக்கிறார்.
ஆனால் அப்பொழுது காலகட்டத்தில் விஜய்க்கு வரும் கதையை அவரது அப்பா தான் கேட்டு ஓகே சொல்வார் அகத்தியன் சொன்ன கதை விஜய் அப்பாவுக்கு பிடித்திருந்தாலும் இது விஜய்க்கு செட்டாகாது எனக் கூறிய நிராகரித்துவிட்டார் உடனே அகத்தியன் அஜித்தை சந்தித்து கதையை கூறி இருக்கிறார்.
உன் மேல நம்பிக்கை இல்ல.. காஷ்மீர் ஷூட்டிங்கில் சத்தியம் வாங்கிய விஜய் – மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்
ஆனால் அஜித் இந்த கதையை வேண்டாம் என உதறிதள்ள கடைசியில் நடிகர் கார்த்திக்கு போக கதை சொல்லி ஓகே சொல்ல கோகுலத்தில் சீதை என்ற பெயரில் படம் ரீலிஸ் ஆனது கார்த்திக் உடன் இணைந்து சுவலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். படம் பெரிய ஹிட் அடித்தது.