அஜித், சூர்யா படத்தில் அம்மாவாக நடித்த பிரபலம் இதுவரை விஜய்யுடன் மட்டும் நடித்தது கிடையாது – யார் அது தெரியுமா.?

vijay

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது தனது 66வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

தளபதி 66 படத்தில் விஜயுடன் கைகோர்த்து ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சாம் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த திரைப்படத்தை முடித்து விட்டு இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தனது 67வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா உலகில் இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகளுடன் விஜய் நடித்து அசத்தியுள்ளார் ஆனால்  ஒரே ஒரு சினிமா பிரபலம் உடன் மட்டும் பல வருடங்களாக நடிக்காமல் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது அந்த பிரபலம் வேறுயாருமல்ல நடிகை சரண்யா பொன்வண்ணன் தான்.

சினிமா உலகில் தனது பயணத்தை ஆரம்பித்ததிலிருந்து  இப்போதுவரையிலும் சரண்யா பொன்வண்ணன் ஹீரோயினாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அம்மா, சித்தி என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

saranya
saranya

இவர் இதுவரை அஜித், சூர்யா, தனுஷ், உதயநிதி, சிவகார்த்திகேயன், ஜீவா போன்ற பல்வேறு ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தி உள்ளார் ஆனால் இவர் இதுவரை நடிகர் விஜயுடன் மட்டும் எந்த ஒரு படத்திலும் நடித்தது கிடையாதாம். இவர் தனது திறமையை நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதைப் பெற்றுள்ளார் அப்படிபட்ட நடிகையுடன் விஜய் நடிக்காமல் இருப்பது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது.