தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை ஹச். வினோத் இயக்கி வருகிறார் போனி கபூர் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் இரண்டு கட்டப்பட்ட விடுப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கில் விறுவிறுப்பாக எடுத்தப்பட்டு வருகிறதாம் இதில் அஜித் பைக் ஸ்டண்ட் எல்லாம் பயங்கரமாக பண்ணி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாளம் நடிகை மஞ்சு வாரியார் இளம் நடிகர் வீரா சமுத்திரகனி மகாநதி சங்கர் யோகி பாபு அஜய் ஜான் கோக்கின் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை அஜித் வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் என பெரிய வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தை பற்றிய செய்து ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் அஜித்தும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் அது அஜித்தும் தெரியும் யுவனுக்கும் தெரியும். ஒரு தடவை அஜித் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதிய நன்றியும் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் சொன்னது யுவன் நீங்கள் ஒரு ராக்ஸ்டார் தீனா, பில்லா, மங்காத்தா திரைப்படங்களுக்காக பெரிய நன்றிகள் கூறி ஒரு லெட்டரில் எழுதி இருந்தார். மேலும் அதில் அஜித் கையெழுத்து போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.