சினிமா உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் திரை உலகில் சினிமாவின் மூலம் மோதிக் கொள்வது வழக்கம் ஆனால் சமீபகாலமாக நடிகர்களே ஒரு புதிய இவை எடுத்துள்ளனர் டாப் நடிகர்கள் மோதும் போது தயாரிப்பாளர்களுக்கு போதுமான வசூல் கிடைக்காமல் போகிறது.
அதை கருத்தில் கொண்டு டாப் நடிகர்கள் மோதிக் கொள்ளாமல் நல்ல நாட்களில் சோலோவாக இறங்கி அசத்துகின்றனர்.
அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் வலிமை திரைப்படம் சோலோவாக களம் இறங்க திட்டமிட்டு இருந்தது ஆனால் அது நடக்கவில்லை
காரணம் கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்து உள்ளதால் தமிழக அரசு மக்கள் கூடும் இடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. திரையரங்கில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது இருப்பினும் அஜித்தோ மக்கள் மற்றும் ரசிகர்கள் மிக முக்கியம் என கருத்திற்கொண்டு வலிமை திரைப்படத்தை மற்றொரு தேதியில் வைத்துக் கொள்ளலாம் என சொல்லி படத்தை பொங்கலுக்கு வெளியிட மறுத்தது.
இந்த முடிவு சரிதான் என ரசிகர்களும் ஏற்றுக் கொண்டிருந்தாலும் வலிமை திரைப்படத்தின் அடுத்த தேதியை அறிவிக்க வேண்டும் என ஒருபக்கம் கேட்டுக் கொண்டுதான் வருகின்றனர். தளபதி விஜய் திரைப்படமான பீஸ்ட் படம் வெளி வருவதற்கு முன்பாகவே ரசிகர்களை சந்தோஷப்படுத்த வலிமை படம் வெளியே விட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பீஸ்ட் படம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய ரெடியாக இருக்கிறது ஆனால் அஜித்தின் வலிமை மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்களும் தற்போது படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.