தமிழ் சினிமா உலகில் தன் வேலை உண்டு நான் உண்டு என இருந்து வருபவர் தல அஜித் ஆனால் இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் பின் தொடர்ந்து வருகின்றனர் மேலும் இவர் சமீபகாலமாக சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலமும் இவரை பல கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இப்படி சினிமா உலகில் வந்து கொண்டிருக்கிறார் தற்போது ஹச். வினோத் அவர்களுடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் மீதி படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவும் முடிந்தபின் எடுக்கப்படும் என தெரியவருகிறது இந்த நிலையில் அஜித் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றனர்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்துடன் அமர்ந்திருந்த புகைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெற்றதைத் அதனைத் தொடர்ந்து அஜித் அவர்கள் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடியது மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது இப்படி இவரைப் பற்றிய செய்திகள் தினந்தோறும் வெளியிட்டு வருகின்றனர் அவரது ரசிகர்கள் அதுபோல தற்போதும் அஜித் பற்றிய செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
ஜோதிகா அவர்கள் மேடை நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்கா காக்கா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள உயிரின் உயிரே பாடலை அந்த மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார் அப்போது சிம்பு சூர்யா அஜித் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் அமர்ந்து பார்த்து இருந்தனர் அப்போது அஜித் சூர்யாவை பார்த்து ஏதோ கூற அதற்கு அஜித்தும், சூர்யாவும் குலுங்கி குலுங்கி சிரிக்கின்றனர் அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.