அஜித், சூர்யா பற்றி கேள்வி கேட்ட ரசிகர்கள் தமன்னாவின் தரமான பதில்.! ரசிகர்கள் ஹாப்பி

Veeram
Veeram

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர் நடிகை தமன்னா இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் சூர்யா தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சமிபத்தில் மிகப்பெரிய வெற்றிப் படங்களான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களை கொடுத்த இவருக்கு பல மொழிகளில் பட வாய்ப்பு இருத்தலும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அவர் ஒரு படத்தில் கமிட்டாகி விட்டார் தனது திறன்பட நடிப்பை வெளிப்படுத்தி திரும்பவும் கால் பதிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் தமன்னா அவர்கள் #ASKTamannaah என்ற ஹேஸ்டேக் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார் அப்போது ரசிகர் ஒருவர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமன்னா வாய்ப்பு இருந்தால் அவருடன் நடிப்பேன் என்றும் அது எனது மிகப்பெரிய கனவு என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இவர் இருவர்களும் இதற்கு முன்பு அயன் படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருவர் அஜித்துடன் இருக்கும் வீரம் புகைப்படத்தை பதிவிட்டு இதை பார்க்கும் பொழுது உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது  எனக்கேட்டார். அதற்கு பதிலளித்த தமன்னா இது மறக்க முடியாத நினைவுகள் என்று பதிலளித்துள்ளார்.

மேலும் சில ரசிகர்கள் கேள்விகளை எழுப்பினர் அதற்கு பதில் அளித்தார் தமன்னா.