கொரோனாவால் சிக்கி கொண்ட தல அஜித்.! எங்கு தெரியுமா.?

ajith kumar
ajith kumar

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை ஏப்ரல் 15 வரை நீடிக்கும் என பிரதமர் மோடி அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். கொரோனா வைரஸ் வருவதை தடுக்க மருத்துவமும் அரசாங்கமும் ,காவல்துறையினரும் போராடுகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதுவரை சுமார் 26 பேருக்கு மேல் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிர்வினையாற்றும் மருந்து இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த கவலையில் உள்ளனர் கொரோனா வைரஸ் காரணமாக உலகில் சுமார் ஆயிரக்கணக்கான பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதனால் கொரோனா வைரஸுக்கு எதிராக எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன இந்தநிலையில் தல அஜித் அவர்கள் ஹைதராபாத்தில் தங்கி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் படபிடிப்பு தடை செய்யப்பட்டுள்ளன இந்தநிலையில் அஜித் அவர்கள் வலிமை  படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றிந்தார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் ஹைதராபாத்தில் தங்கிவிட்டார் என பிரபலம் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரச்சனை தீர்ந்த பின் அவர் சென்னைக்கு திரும்புவார் என மேலும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.