சினிமா உலகில் ஜெயிப்பவர்கள் வாழ்க்கையில் தோற்கிறார்கள் வாழ்க்கையில் ஜெய்பவர் சினிமாவில் தோற்கிறார்கள்.. இது ஒரு பலருக்கும் பொருந்தும் ஆனால் இரண்டிலும் ஜெய்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் இருக்கிறார்கள் அந்த லிஸ்ட்டில் இருப்பவர்தான் நடிகர் அஜித்..
அமர்க்களம் திரைப்படத்தின் போது ஷாலினியை காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார் அன்றிலிருந்து இன்று வரையிலும் இந்த ஜோடி ரொம்ப சந்தோஷத்துடனும் அதே காதலுடன் இருக்கின்றனர் அதை உறுதிப்படுத்தும் வகையில் இப்பொழுது இருவரும் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களில் கூட அந்த ரொமான்டிக் தெரியும்.
இந்த நிலையில் அஜித் – ஷாலினி குறித்து ஒரு தகவல் இணையதள பக்கத்தில் உலா வருகிறது. அமர்க்களம் படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித் ஷாலினியை ஒரு தலையாக காதலித்து உள்ளார் ஒரு சமயத்தில் சரணிடம் சீக்கிரம் படத்த எடுத்துருங்க இல்லையென்றால் ஷாலினியை நான் லவ் பண்ணிடுவேன் போல என்று சொல்லி இருக்கிறார் இதை கேட்ட ஷாலினி வெட்கத்தில் தலை குனிந்தார் அதன் பிறகு செய்தி மெல்ல மெல்ல வெளியே தெரிந்தது ஒரு நாள் அஜித்தின் பிறந்தநாள் வரப்போகிறது.
என தெரிந்து கொண்ட ஷாலினி அஜித்திற்கு பிடித்த பொருள் எல்லாம் வாங்கி பேக் செய்து இயக்குனர் சரணிடம் கொடுத்து இதை அஜித்தின் போட்டிக்கோவில் வைத்து விடுகிறீர்களா என கேட்டாராம் சரணம் சொன்னது போலவே வைத்துவிட்டு வந்து விட்டாராம்.. பிறந்தநாள் அன்று இரவு அஜித்திற்கு போன் செய்து அந்த கிப்ட் ஐ பிரித்து பார்க்க சொல்லி உள்ளார். அதில் அஜித்திற்கு பிடித்த பொருள் இருந்தன மிக முக்கியமாக குட்டி பைக் ஒன்று அதிலிருந்து இதை பார்த்த அஜித்துக்கு ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டாராம்.
அமர்க்களம் படத்தின் நேரத்தில் சிகரெட்டை அதிகமாக அஜித்தை பிடிப்பாராம் ஒரு சிகரெட்டில் இருந்து மற்றொரு சிகரெட்டை பற்ற வைப்பாராம் இதை கவனித்துக் கொண்டிருந்த ஷாலினியை பார்த்த அஜித் இது உனக்கு பிடிக்காதா என்று கேட்டாராம் அதற்கு ஷாலினி நான் சிகரெட் பிடிக்க வேண்டாம் என சொல்லவில்லை புகை நமக்கு பகை என்று சொன்னாராம் அன்றிலிருந்து சிகரெட் பிடிப்பதை அஜித் விட்டு விட்டாராம்.