மெகா ஹிட் படலுக்குக்காக வலியுடன் அழுதுக் கொண்டே நடித்த அஜித்.! உண்மையை சொன்ன இயக்குனர்.

ajith
ajith

அஜித் ,மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தப்பு போன்ற நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்து 2000ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்தை ராஜீவ் மேனன் அவர்கள் இயக்கியிருந்தார் இப்படம் திரையரங்குகளில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இப்படத்தை பற்றி சுவாரஸ்யமான செய்திகளை இயக்குனர் ராஜீவ் மேனன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அவர் கூறியது.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்திற்கு பதிலாக முதலில் நாங்கள் பிரசாந்தை தான் அணுகினோம் ஆனால் அவர் ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்ததால் தற்போதும் அவருடன் இணைந்து நடித்தால் நடிப்பேன் எனவும் தெரிவித்தார். இதனை அடுத்து நாங்கள் அஜித் சாரை அணிகினோம் அப்பொழுது அவர் அப்போலோ ஹாஸ்பிடலில் அஜித் ஆபரேஷன்னுக்காக அட்மீட் செய்யபட்டு இருந்தார். அப்பொழுது நான் அங்கேயே கதையை சொன்னேன்.அவர் ஓகே சொன்னார் மேலும் ஆபரேஷன் முடிஞ்சு படத்திற்கு வரேன் என சொன்னார்.

இதனையடுத்து அவர் படத்திலும் கமிட் மிட்டாய் நடித்தார். அப்பொழுது சந்தன சன்னலை என்ற பாடலை இது ஒரு ரயில்வே டிராக்கில் வைத்து எடுத்தோம் அப்பொழுது அவருக்கு முதுகில் பயங்கர வலி இருந்தது. இருப்பினும் அவர் அதனை பொருட்படுத்தாமல் நடித்து வந்தார். அந்த பாடலின் பொழுது இடையில் ரயில்கள் சென்றன இதனால் அந்த பாடல் எடுக்க தாமதம் ஆயின இருப்பினும் அவர் வலியுடன் உடன் நடித்து வந்தார் ஒரு கட்டத்தில் வலியை தாங்க முடியாமல் அழுதார் அதை பார்த்து எங்கள் மனதில் நொறுங்கியது.

நாங்கள் அதற்கு நீங்கள் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறினோம் என்னால் சூட்டிங் தடைபடக் கூடாது என கூறி அந்த பாடலை முழுவதுமாக நடித்துக் கொடுத்தார். எனது வாழ்நாளில் அஜித் சார் அப்பொழுது  தான் அழுது நான் பார்த்தேன் என இயக்குனர் ராஜீவ் மேனன் கூறினார்.