அஜித் நடிக்கும் வலிமை படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம் உற்சாகத்தில் ரசிகர்கள்.!

ajith

தமிழ் சினிமாவில் தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து இந்த திரைப்படத்திற்காக  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் வலிமை திரைப்படம் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது அங்கு படப்பிடிப்புகள் முடிந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடத்த போவதாக சமீபத்தில் தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்ததைப் பார்த்தோம்

இதையடுத்து ஒரு சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் படப்பிடிப்பில் தல அஜித் பைக்கில் வீலிங் செய்த புகைப்படங்கள் மட்டுமே சமூக வலைதள பக்கங்களில் வெளியானது ஆனால் வலிமை திரைப்படத்தை பற்றி அதிகமாக புகைப்படங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது ஆந்திர ரசிகர் ஒருவர் அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட அவர் பதிவிட்ட புகைப்படங்களை அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் தற்பொழுது அந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.