படத்தில் நடிகர்கள் உதவி என்று சொன்னால் காசை வாரி இறைபார்கள். ஆனால் நிஜத்தில் அதை ஒரு சிலர் மட்டுமே சரியாக செய்து வருகின்றனர் அந்த வகையில் அஜித் ஒருவர் இவர் தன்னிடம் உதவி கேட்டு வரும் பலரிடமும் தன்னால் முடிந்த காசுகளை கொடுத்து வருகிறார். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது பார்க்க இருக்கிறோம்..
உதவி இயக்குனர் ஒருவர் தனது நண்பரின் குழந்தைக்கு இருதய ஆப்ரேஷன் எனக்கூறி விஜயகாந்திடம் உதவி கேட்டுள்ளார் அந்த சமயத்தில் விஜயகாந்த் கண்ணுபட போகுதய்யா படத்தில் பணியாற்றினார் உதவி கேட்ட அவரிடம் விஜயகாந்த் இதுவரை 2000 பேர் வரிசையில் இருக்காங்க நீ வேற போயா என்று சொல்லவும் அந்த உதவி இக்குனார் மருத்துவ செலவுக்கு தேவையான 2 லட்சத்தில் ஒன்னேகால் லட்சம் இருக்கிறது.
75,000 மட்டுமே தேவை உங்களால் முடிந்ததை கொடுங்கள் என சொல்ல கடுப்பான விஜயகாந்த் அனுப்பிவிட்டார். மனம் தளராத அந்த உதவி இயக்குனர் மருந்து வாங்க 500 ரூபாய் கேட்டாராம் அதைக் கூட தராமல் துரத்தி விட்டாராம் விஜயகாந்த் நொந்து போன அந்த உதவி இயக்குனர் தன் நண்பர் உதவி கேமராமேனிடம் விஷயத்தை சொல்ல..
நடிகர் அஜித்திடம் அழைத்துப் போனாராம் படபிடிப்பிலிருந்த அஜித் இவர்கள் மூவரும் உணவு குடுங்க என சொல்லிவிட்டு நடிக்கப் போய்விட்டாராம் சிறிது நேரம் கழித்து வந்த அஜித் சரி சொல்லுங்க என கேட்டதற்கு அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லையாம். அஜித் கதை தானே சொல்ல வந்திருக்கிறீர்கள் என கூற இல்லை மணவாளன் குழந்தைக்கு ஆபரேஷனுக்கு பணம் கேட்டு வந்தோம் என சொல்ல கோபத்தில் அஜித் கத்தி விட்டாராம்..
இதை முதலிலேயே சொல்லக்கூடாதா நான் கதை சொல்ல வந்திருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டேன் என கூறினாராம் எவ்வளவு தேவையான அஜித் கேட்க உதவிய இயக்குனர் ஒரு 50 ஆயிரம் கொடுங்கள் என்றாராம் கோபமான அஜித் மொத்தம் எவ்வளவு தேவை என்று சொல்லுங்கள் என்று கூற 75,0000 தேவை என சொல்லவும் மொத்தமாக நானே தருகிறேன் ஆனால் இதை பத்திரிக்கைக்கு சொல்லக்கூடாது என்ற கண்டிஷன் உடனே ஒரு செக் போட்டு கொடுத்து விட்டாராம்..