பொங்கல் ரேஸில் ஜெயிக்கப் போவது யார்.? துணிவா.. வாரிசா.. பல வருடங்களுக்கு முன்பே விஜய் பற்றி பேசிய அஜித்

ajith and thunivu
ajith and thunivu

சினிமா உலகில் எப்பொழுதுமே போட்டிகள் அதிகம் அந்த வகையில் ரஜினிக்கு இடத்தை பிடிக்க அஜித், விஜய் போன்ற நடிகர்கள் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து பூட்டி போட்டு வருகின்றனர் அந்த வகையில் இப்போ அஜித்து வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து  துணிவு திரைப்படத்தில் செம்ம மாஸாக நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.

அதுவும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு என மிகப் பெரிய ஒரு நட்சத்திரபட்டாளமே நடித்துள்ளது.

துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்தை எதிர்த்து விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கிறது வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சென்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருந்தாலும் அந்த படத்திலும் ஆக்சன் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

விஜயுடன் இணைந்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படமும் பொங்கலை கூறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் அடுத்த வருடம் பொங்கல் மிகப்பெரிய ஒரு போட்டியாக பார்க்கப்படுகிறது.

இதனால்  இந்த ரேஸில் யார் ஜெயிக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ளவே மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பல வருடங்களுக்கு முன்பு அஜித்  நடிகர் விஜய் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. நாங்கள் எதிரிகள் இல்லை.. எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது போட்டி, பொறாமை தான் வேறு எதுவும் இல்லை என கூறினார்.