தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் அஜித் – இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ.!

ajith
ajith

நடிகர் அஜித் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து பல ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார். இவருக்கு தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

மேலும் நடிகர் அஜித் சினிமா குடும்ப வாழ்க்கை என இரண்டிலும் சிறந்து விளங்கி வருவதால் அவரை ரசிகர்கள் பலரும் ரோல் மாடலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் தற்போதும் வருடத்திற்கு ஒரு சிறப்பான படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அந்த வகையில் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61வது திரைப்படத்தில் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் உடல் எடையை அதிரடியாக குறைத்து வேற லெவலில் இருக்கின்றார். படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்த நிலையில் சிறு இடைவெளி காரணமாக அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு அவர் பயணிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சில அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித் இந்த சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்து தனது 61 வது படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது நடிகர் அஜித் அவரது மனைவி ஷாலினி மற்றும் மகன், மகள் போன்ற அனைவரும் குடும்பத்துடன் விமானத்தில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை தற்போது அஜித் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.