தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித்தும் ஒருவர். இவர் பல வெற்றி தோல்விகளை கடந்து தற்போது நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் நடிக்க தொடங்கி தனது திறமையின் மூலம் பல கோடி ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார் என்பது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தல அஜித் மகன் ஆத்விக்கிடம் நெருங்கிய நண்பர் ஒருவர் பேட்டி ஒன்றை எடுத்து உள்ளார்.
அந்த பேட்டியில் உங்க அப்பா நடித்து வெளிவந்த திரைப்படங்களில் எந்த திரைப்படம் உங்களுக்கு பிடித்தது என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு அவரோ மங்காத்தா மற்றும் விசுவாசம் ஆகிய இரண்டு படங்கள் தான் எனக்கு பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து அஜித் நடித்துவரும் வலிமை திரைப்படமும் அடுத்ததாக இந்த லிஸ்டில் சேரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.