கமலுக்கு வந்த கதையை தட்டி பறித்த அஜித் – படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்..

ajith-and-kamal-
ajith-and-kamal-

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் நடிகர் அஜித் குமார். இவர் அண்மை காலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வசூலை பதிவு செய்கின்றன அதனால் அஜித்தை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அதன் காரணமாக அவரது மார்க்கெட் கீழே இறங்காமல் இருக்கிறது.

அஜித் வலிமை படத்தை தொடர்ந்து தனது 61 வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதாம் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

துணிவு திரைப்படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் சிட்டிசன்.. இந்த திரைப்படம் அஜித் கேரியரில் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்தது. ஆனால் உண்மையில் சிட்டிசன் திரைப்படம் அவருக்கான திரைப்படம் கிடையாதாம். சரவணா சுப்பையா இந்த படத்தின் கதையை முதலில் கமலிடம் தான் கூறியிருக்கிறார் அவருக்கு பிடித்திருந்தாலும் அந்த சமயத்தில் ஹேராம் திரைப்படத்தில் நடித்து வந்ததால் பிற மாதங்கள் காத்திருங்கள் என கூறினாராம்.

சரவணா சுப்பையாவும் இரண்டு மூன்று மாதங்கள் காத்திருந்தாராம் ஆனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இயக்குனர் சரவணா சுப்பையா அஜித்திடம் இந்த கதையை கூற அவருக்கு ரொம்ப பிடித்து போகவே உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்தார் மேலும் அந்த இயக்குனருக்கு ஒரு புதிய பைக்கையும் வாங்கி கொடுத்து அசத்தினாராம். இதனை சமீபத்திய பேட்டியில் சரவணா சுப்பையாவே வெளிப்படையாக கூறினார்.