அஜித் ரசிகரின் செல்போனைப் பிடுங்கியது சரியா தவறா.! ஆரிடம் கேட்கப்பட்ட நபர்.

கடந்த 6ஆம் தேதி பல திருப்பங்கள் நிறைந்த நாளாக பார்க்கப்படுகிறது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் அனைவரும் தனது ஜனநாயக கடமையான ஓட்டு போட்டனர்.

இது சாதாரணமாக நடந்தாலும் ஓட்டு போட வந்தாலும் பிரபலங்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான பாணியில் வலம் வந்ததால் அன்று ஒரு மட்டும் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறினார்.

அந்தவகையில் வேட்பாளர்கள் பலரும் வித்தியாசமாக ஓட்டு போட்டு இருந்தாலும் சினிமா பிரபலங்கள் அதையும் தாண்டி சிறப்பாக வலம் வந்தனர் அந்தவகையில் விஜய் சைக்கிளில் வந்து அசத்தினர். அதுபோல அஜித் மாஸ்க் அணிந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

அப்பொழுது ரசிகர் ஒருவர் அஜித்தின் பக்கத்தில் இருந்துகொண்டு மாஸ் கூட அணியாமல் செல்ஃபி எடுத்தார் அப்போது அஜித் அந்த நபரின் போனை வாங்கி வைத்துக்கொண்டு பின் ஓட்டு போட்ட பிறகு அவரை சந்தித்து நீங்கள் மாஸ்க் மற்றும் கையுறை எதுவும் போடாமல் இருந்தால் என்னையும் தாண்டி மற்ற எல்லோரையும் பாதிக்கும் என அவருக்கு அறிவுரை கூறி பின் அந்த போனை கொடுத்தார் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வேற லெவல் டிரென்ட் ஆகியது.

இது குறித்து பல பிரபலங்கள் தனது கருத்துக்களை கூறி வந்த நிலையில் பிரபல பிக்பாஸ் நடிகர் ஆரியிடம் நிகழ்ச்சி ஒன்றில் கேட்டுள்ளனர்.

அதற்கு ஆரி, அஜித் சார் அந்த ரசிகருடன் மன்னிப்பு கேட்டுவிட்டு செல்போனையும் திரும்பக் கொடுத்துவிட்டார் அதை நீங்கள் திரும்பி பார்க்க வேண்டும் பிரபலங்கள் வெளியில் வரும்பொழுது இதுபோன்று ரசிகர்கள் சூழ்ந்து கொள்வது வழக்கம்.

ஆனால் தற்பொழுது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அருகில் வரும் பொழுது கையுறை மற்றும் முகமூடி அணிந்து இருந்தால் பிரச்சனை இல்லை இதை ரசிகர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அஜித் சார் செய்த செயலில் ஒன்று தவறும் இல்லை.

மேலும் அந்த கூட்டத்திற்கு நடுவே அந்த நபரை அழைத்து செல்போனை கொடுத்ததையும் நீங்கள் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார்.