கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் படங்கள் திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் பெரிய அளவில் சமீபத்தில் வந்த படங்கள் மக்கள் கூட்டத்தை இழுக்கவில்லை என்றால் ஒரு குற்றச்சாட்டு இருந்தது விஜய்யின் மாஸ்டர் ஆரம்பத்திலேயே வந்து பெரிய அளவில் மக்கள் கூட்டத்தை எடுத்து வசூலிலும் விமர்சனத்தையும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அதன் பின் வந்த படங்கள் அதை செய்ய தவறினால் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் வெளியான டாக்டர் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் கூட்டத்தை திரையரங்கு பக்கம் இழுத்தது மூன்று வாரங்கள் கடந்த பிறகும் தற்போதும் இந்த திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
படம் நல்ல கருத்து மற்றும் காமெடி இருப்பதால் தற்பொழுது பிற மொழிகளிலும் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது அந்த வகையில் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை டாக்டர் திரைப்படம் 90 கோடிக்கு மேல் வசூல் சாதனையை அள்ளிய நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் 100 கோடியை இந்த திரைப்படம் தொட்டுவிடும் என கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் கேரியரில் முதல் 100 கோடியை தொடும் படமாக இது அமையப்போகிறது மேலும் சமீபகாலமாக டாப் நடிகர்கள் படங்கள் கூட 100 கோடி வசூலைத் தொட்ட கிடையாது அப்படி இருக்கும்பொழுது சிவகார்த்திகேயன் படம் தற்போது 100 கோடியை தொடுவது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது மேலும் தற்பொழுது வசூல் கிங் நடிகர்களாக இருந்து வரும் ரஜினி விஜய் அஜித் ஆகியோர் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைய இருக்கிறார்.
திரைப்படம் ஆரம்பத்திலேயே விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை வசூலில் ஓவர்டேக் செய்த நிலையில் தற்போது பல நடிகர்கள் படங்களை வசூலில் தட்டி தூக்கி முன்னேறிக் கொண்டே செல்கிறது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம். இதனால் மற்ற நடிகர்களை தற்பொழுது இவர் மீது சற்று கடுப்பில் உள்ளனர்.