Soori speak about Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த துணிவு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 230 கோடிக்கு மேல் வெற்றி கண்டது. அதனை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.
மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் மிகப் பிரமாண்ட பொருள் செலவில் தயாரிக்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடம் ஜனவரியில் முடியும் என சொல்லப்படுகிறது படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க துபாய் மற்றும் அபுதாபியில் தான் நடக்க இருக்கிறது.
அஜித் துபாயில் தனது அலுவலகத்திலையோ அல்லது அங்கு தான் வாங்கி வைத்து இருக்கும் வீட்டிலேயே தங்கி தான் ஷூட்டிங்கிற்கு சென்று வருவார் என கூறப்படுகிறது அஜித்துடன் இணைந்து அர்ஜுன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, சஞ்சய் தத் போன்ற பிரபலங்கள் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் எழுகின்றன.
இந்த நிலையில் காமெடி நடிகரும் ஹீரோவுமான சூரிசமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்து பேசி உள்ளார் அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்.. தன்னம்பிக்கை, மன உறுதி அவர்கிட்ட பாக்குறேன். தன்னைத் தானே செதுக்கி படிப்படியாக வளர்ந்து இந்த இடத்தில் இருக்கிறார். என்னை போன்ற பலருக்கு நடிகர் அஜித் ரோல் மாடலாக இருக்கிறார் எனக் கூறி உள்ளார் சூரி.
அந்த வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் சூரி சொல்வது உண்மை தான் போராடும் ஒவ்வொருவருக்கும் அஜித்தை பிடிக்கும் அவரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு பலரும் வளர்ந்து வருகின்றனர் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.