அஜித் சார் யாரையும் நம்ப வச்சு ஏமாற்றவில்லை – ஹச் வினோத் பேட்டி..!

ajith-
ajith-

நடிகர் அஜித்குமார் அண்மைக்காலமாக வெற்றி படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க ஹச் வினோத்துடன் மீண்டும் கைகோர்த்து தனது 61ஆவது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து படம் உருவாகி உள்ளது இந்த திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீசாக இருக்கிறது அதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க அடுத்தடுத்த அப்டேட்டுகளை  கொடுத்து வருகிறது. அந்த வகையில் இதுவரை ஃபர்ஸ்ட் லுல் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர் போன்றவை வெளிவந்த நிலையில் கடைசியாக சில்லா சில்லா பாடல் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹச் வினோத் சில தகவல்கள் கொடுத்துள்ளார் அதில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒன்றாக அஜீத் ஏன் படங்களின் பிரமோஷனுக்கு வரமாட்டார் என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த ஹெச் வினோத் அஜித் சார் பிரமோஷனுக்கு வர மாட்டார் என்ற விஷயம் தெரிஞ்சு தானே..

தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் பண்றாங்க புரமோஷனுக்கு வருவேன் என நம்பிக்கை கொடுத்து அஜித் சார் யாரையும் ஏமாற்றவில்லையே இது மார்க்கெட் உலகம் பணம் பாக்கணும்னா மார்க்கெட்டிங் பண்ணித்தான் ஆகணும் குண்டூசி விற்க கூட மார்க்கெட்டிங் முக்கியம் அதனால் நானே அஜித் சார் நிலைப்பாட்டில் இருந்து முரண்படுகிறேன் ஆனால் ஒருவரின் கொள்கை முடிவில் தலையிட நாம் யார் என்று இயக்குனர் ஹெச் வினோத் பேசியுள்ளார்.