அரக்கு பள்ளத்தாக்கில் ஸ்டண்ட் காட்டும் அஜித்.! பட குழுவினருக்கு கண்டிஷன் போட்ட தயாரிப்பு நிறுவனம்.!

ajith
ajith

தமிழ்நாட்டில் அதிக ஆண் ரசிகர்கள் பட்டாளத்தை வளைத்து போட்டிருப்பவர் அஜித் குமார் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் அவரது ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவார்கள் அந்த வகையில் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் தனது அடுத்த படமான 61-வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தையும் பெரிய அளவில் கொண்டாட காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்திற்காக அஜித் ரொம்பவும் மெனக்கட்டு நடித்து வருகிறார் இந்த படத்தின் இரண்டு கட்டப் படபிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் எல்லாம் வெளிவந்தன ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஆந்திராவில் உள்ள அரசு பள்ளத்தாக்கில் இறுதி கட்ட ஷூட்டிங் போய்க் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், ஜான் கொக்கின், இளம் நடிகர் வீரா, அஜய், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகுவதாக சொல்லப்படுகிறது இந்த படம்  ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கில் நடைபெற்று வருகிறது. இங்கு இந்த படத்தின் படப்பிடிப்பு போய்க் கொண்டிருப்பதால் எந்த விஷயமும் வெளியே தெரிந்துவிடக் கூடாது என பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதாம். ஏற்கனவே ஏகே 61 படத்திலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகிவிட்டன

இறுதி கட்டத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் ஒரு வீடியோ கூட லீக்காகி விட கூடாது என்பதற்காக படகுழுவும் சரி, தயாரிப்பு நிறுவனமும் சரி ரொம்ப நிதானமாக ஒவ்வொருவரையும் கண்காணித்து வருகிறதாம்.மேலும் இந்த அரக்கு பள்ளத்தாக்கில் கிளைமாக்ஸ் ஸ்பாட்டில் அஜித் பைக் ஸ்டண்ட் எல்லாம் பண்ணுகிறார் என சொல்லப்படுகிறது.