நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் தற்பொழுது விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் குட் பேக் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் அஜித்குமார் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமீபத்தில் நடிகை அஜித்குமாரின் மனைவி ஷாலினி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அப்பொழுது விடா முயற்சி படபிடிப்பில் இருந்த அஜித் குமார் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஓடி வந்து தன்னுடைய மனைவியுடன் தங்கி ஆபரேஷனை நல்லபடியாக முடித்து விட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரேஷனுக்கு பிறகு ஷாலினி தற்பொழுது ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய மகன் தனக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தும் புகைப்படத்தை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதுவரை தன்னுடைய கணவரின் புகைப்படங்களை வெளியிட்ட ஷாலினி முதன்முறையாக தன்னுடைய மகன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்த அன்பை வெளிப்படுத்தும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படத்திற்கு அதிக லைக் போட்டு ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.