பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் அதே போல் மனம் ஒத்து திருமணம் செய்து கொண்டாலும் நீண்ட காலம் ஒரு சில தம்பதிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள் அந்த லிஸ்டில் சூர்யா ஜோதிகா, பிரசன்னா சினேகா என பலரை கூறிக் கொண்டே போகலாம். இந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் அஜித் மற்றும் ஷாலினி இவர்கள் இருவரும் சினிமாவில் நடித்து வந்தவர்கள் தான் ஆனால் இருவரும் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
அதேபோல் ஷாலினி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு நேர இல்லத்தரசியாக மாறிவிட்டார் நடிப்புக்கு ஒரேடியாக முழுக்கு போட்டு விட்டார். அதேபோல் என்ன தான் திருமணமானாலும் தன்னுடைய லட்சியத்தை எப்பொழுதும் கைவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் அந்த வகையில் ஷாலினி அவருக்கு பிடித்தமான பேட்மிட்டன் விளையாட்டு விளையாண்டு வருகிறார்.
அதேபோல் அஜித்தும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தாலும் படங்களில் நடிப்பதை காட்டிலும் தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது அஜித் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஓடோடி வந்து விடுவார் அப்படி ஒரு வேலை வர முடியவில்லை என்றால் தான் இருக்கும் இடத்திற்கு தன்னுடைய குடும்பத்தை வரவழைப்பார். அப்படிதான் அஜித்தின் மகன் பிறந்தநாளை துபாயில் குடும்பத்துடன் கொண்டாடினார்கள்.
அஜித் சென்னையிலிருந்து விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக ஆஜர் பாய்ஜான் சென்றார் அங்கு சூட்டிங் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது காரணம் இந்த திரைப்படத்தை வருகின்ற தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்யப்பட குழு திட்டமிட்டுள்ளது அதனால் படும் பிசியாக இருக்கிறார் அஜித். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது மருத்துவமனைக்கு செக்கப்பிற்காக சென்றுள்ளார்.
அங்கு சென்ற அஜித்தின் மனைவிக்கு சிறியதாக சர்ஜரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள் இதனை கேள்விப்பட்டதும் அஜித் ஜெட் வேகத்தில் பறந்து சென்னைக்கு வந்துள்ளார் அது மட்டுமே இல்லாமல் அஜித்தின் மனைவி ஷாலினி கையைப் பிடித்துக் கொண்டு நான் இருக்கிறேன் என கூறியுள்ளது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அஜித் தன்னுடைய மனைவிக்கு மிகப்பெரிய சப்போர்ட் ஆக இருப்பதாக இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.