கமல் படத்தின் பூஜையில் அஜித் – ஷாலினி.! இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ.

ajith and shalini
ajith and shalini

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் அண்மை காலமாக தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருவதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது மேலும் ரசிகர்களும் இவருக்கு அதிகமாகி வருகின்றனர்.

இவர் தற்பொழுது தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.  இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், யோகி பாபு, அஜய் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து AK 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சினிமா உலகில் வெற்றி ருசிக்கும் அஜித் நிஜ வாழ்க்கையிலும் செம்ம சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அப்பொழுது இருந்து இப்பொழுது வரையிலும் அஜித்தின் வாழ்க்கை அமோகமாக இருக்கிறது இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிற மறுபக்கம் அவரது மனைவி ஷாலினி குடும்பத்தை சிறப்பான முறையில் பார்த்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் – ஷாலினி இருவரும் இருக்கும் வீடியோ ஒன்றிய இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் ஷாலினி இருவரும் தெனாலி திரைப்படத்தின் பூஜையில் கலந்து கொண்டனர் அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இந்த வீடியோவில் அஜித் – ஷாலினி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு இடையே ஷாலினி சகோதரன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதோ அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்..