அஜித் செம்ம மாஸாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு.. ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கும் தயாரிப்பாளர் போனி கபூர்.!

ajith
ajith

சினிமா உலகில் உள்ள நடிகர்கள் பலரும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்கின்றனர் ஆனால் அதையும் தாண்டி தனக்கென ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர் தல அஜித் சினிமாவில் வெற்றி / தோல்வி படங்களை கொடுத்தாலும் அவரது ரசிகர்கள் அவரை நேசிக்கின்றனர்.

அதற்கு காரணம் அவர் செய்யும் செயல்களே காரணம் இப்போ இருக்கும் ரசிகர்கள் அஜித்தை பார்த்து ரோல் மாடலாக வைத்து தற்போது பலர் முன்னேறி இருக்கின்றனர். தல அஜித் சினிமாவிலும் சிறப்பான படங்களை கொடுத்து நல்ல நாட்களில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் அந்த வகையில் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் தற்போது ரசிகர்கள் கொண்டாட காத்து கிடக்கின்றனர். படக்குழு தற்பொழுது வலிமை படத்தை பத்தி அப்டேட்டை ஒருபக்கம் வெளியீட்டு கொண்டிருக்க அஜித் தற்போது ஓய்வு நேரத்தில் பைக்கை எடுத்துக் கொண்டு இந்தியாவை சுற்றி வருகிறார்.

அதன் புகைப்படங்களும் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சமிபத்தில் அஜித் வாகாவில் உள்ள இந்திய எல்லையில் புகைப்படங்கள் எடுத்தது பரவி வந்த நிலையில் அடுத்த அடுத்த இடத்தில் இருந்துகொண்டு புகைப்படங்களை எடுத்து வீசி வருகிறார் அஜித்.

அந்த புகைப்படங்களை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அஜித்தின் சுற்றுலா சென்ற சில புகைப்படங்களை வெளியிட்டு அவரை பற்றி பெருமையாக பேசியது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது மேலும் அஜித் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படங்களை..