Ajith : தமிழ் சினிமாவில் மிகவும் அழகாக இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம். கடந்த பொங்கலுக்கு வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் அஜித்தின் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது. இது சொல்லி ரெண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது விடாமுயற்சி பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை..
ஆனால் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என கூறி வந்தனர். இதனால் ரசிகர்கள் ஓவர் சந்தோஷம் அடைந்தனர் இந்த நிலையில் அஜித்தின் செல்பி புகைப்படம் வந்து அதை அனைத்தையும் சுக்கு நூறாக உடைத்து உள்ளது.
அஜித் மீண்டும் தனது பைக் ரைடு துவங்கி உள்ளார் இந்த முறை வெளிநாட்டில் பை ரைடு செய்து வருகிறார் ஜெர்மனி,மார்க் நார்வே, டென்மார்க் என நீண்ட பயணம் போக திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக ஒரு புகைப்படத்தையும் அஜித் வெளியிட்டுள்ளார். அதை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சோகம் இருந்து வருகின்றனர்.
விடாமுயற்சி எப்போ என கேள்வி கேட்டு வருகின்றனர். கடைசியாக வந்த தகவல் என்னவென்றால் செப்டம்பர் மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதற்கு முன்பு ஒரு மாதம் காலம் பைக் ரைடு செல்ல திட்டமிட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.