தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக்கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது அதனை தொடர்ந்து தனது 62வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கு விடா முயற்சி என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க, மகிழ் திருமேனி மிக பிரம்மாண்டமாக எடுக்க உள்ளார். இந்த நிலையில் இன்று மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அஜித்தை பற்றி பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன அந்த வகையில் சினிமா பிரபலம் அந்தணன் அஜித் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொன்னது..
சினிமாவில் ஒரு முறை அதிக விமர்சனத்திற்கு உள்ளானவர் நடிகர் அஜித் குமார் இதனால் அவரது பட வாய்ப்புகளும் குறைந்து போனது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே அந்த சமயத்தில் தமிழ் திரை துறை அஜித்தை கைவிட்டது என கூறலாம் அஜித்திற்கு உதவி செய்ய யாருமே அப்பொழுது வரவில்லை.. இதனால் சினிமா துறையின் மீது பெரும் கோபத்திற்கு ஆளான அஜித்.
அதன் பிறகு தமிழில் பெரும் தயாரிப்பாளரான கோதண்ட ராமய்யா அஜித்திடம் பேசினார் அப்பொழுது அஜித்திற்கு சில அறிவுரைகளை வழங்கினார். அந்த நிலையில் ஒரு பத்திரிகை பேட்டியில் இது குறித்த அஜித் பேசும்பொழுது கண்ட நாயெல்லாம் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம் என நேரடியாகவே கூறினார்.
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவின் மீது வெறுப்பில் இருந்தார் அஜித் என கூறியுள்ளார் பத்திரிக்கையாளர் அந்த அந்தணன். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது மேலும் சமூக வலைதளத்தில் பக்கத்திலும் இந்த தகவலை பரப்பி வருகின்றனர்