புதுமுக இயக்குனருக்காக 3 மணி நேரம் சூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்து இருந்த அஜித்..! வெளிவரும் உண்மை தகவல்.

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் ஆரம்பத்தில் அதிக தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் அண்மைக்காலமாக சிறந்த  இயக்குனர்களுடன் கைகோர்த்து  ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். அந்த வகையில் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் தனது 61வது திரைப்படமான துணிவு.

படத்தின் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தற்பொழுது படக்குழு இறுதிக்கட்ட ஷூட்டிங்கிற்காக பாங்காங்  சென்றுள்ளது. இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அஜித் முதல் முறையாக விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து தனது 62வது திரைப்படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா அஜித்துடன் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதேசமயம் ரமேஷ் கண்ணா அஜித்தை வைத்து தொடரும் என்னும் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அஜித் பற்றி சொல்லியுள்ளது :  தொடரும் படத்தை அஜித்தை வைத்து எடுத்துக் கொண்டு இருந்தேன்.

அப்போ இயக்குனர் விக்ரமன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடிக்க வர சொல்லி ரமேஷ் கண்ணாவுக்கு அழைப்பு மாறி மாறி வந்ததாம் இதை புரிந்து கொண்ட அஜித் நீங்கள் போய் அதை முடித்துவிட்டு வாருங்கள் நாங்கள் காத்திருக்கிறோம் என கூறினாராம் கிட்டதட்ட 3 மணி நேரம் படப்பிடிப்பிலேயே அஜித் இருந்தராம். திரும்பி வந்த ரமேஷ் கண்ணாவுக்கு ஆச்சரியமாக போனதாம்.

எந்த ஒரு புதுமுக நடிகராக இருந்தாலும் இவ்வளவு நேரம் வெயிட் பண்ண மாட்டார்கள் அஜித் தனக்காக அப்பொழுதே அவ்வளவு நேரம் மெனக்கட்டு இருந்தார் நிஜமாலுமே அவர் ஒரு ஜென்டில்மேன் என கூறினார்.  மேலும் அவருடன் அதிகமான படங்களில் நடித்ததால் என்னை அஜித்தின் நெருங்கிய நண்பர் இன்று அழைத்தனர் என ரமேஷ் கண்ணா கூறினார்.