அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது ஏற்கனவே வெளியாகிய ட்ரெய்லர் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.
அந்த வகையில் இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களின் தீவிர திரைப்படமாக மாறி உள்ளது. ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியாகிய விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியது ஆனாலும் தெளிவாக ரசிகர்களை கவரவில்லை ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களின் முழு திருப்தியை கொடுத்துள்ளது.
இந்த திரைப்படம் முன் பதிவு வியாபாரம் என அனைத்திலும் பல கோடி லாபம் பார்த்துள்ளது. இந்த நிலையில் தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது, தமிழகத்தில் முதல் நாளில் 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதேபோல் இந்திய முழுவதும் 65 கோடி வரை முதல் நாளில் வசூல் செய்ததாகவும் இந்த திரைப்படத்திற்கு அஜித் அதிகமாக சம்பளம் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது அந்த வகையில் அஜித் இந்த திரைப்படத்திற்காக 163 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.