Ajith’s salary for the nerkondaparvai is so many crores: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் அஜித். இவரை அவரது ரசிகர்கள் செல்லமாக தல என்று கூப்பிடுவது வழக்கம். தல அஜித் அவர்கள் சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு நடித்த விசுவாசம், நேர்கொண்டபார்வை படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நேர்கொண்ட பார்வை படம் பெரிய கமர்சியல் விஷயங்கள் இல்லாத படமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் தாக்கத்தை கொண்டுள்ளதால் இப்படம் வெகுவாக அனைவரது மத்தியிலும் கவரப்பட்டு நல்லதொரு வெற்றி திரைப்படமாக அமைந்தது.
படத்திற்காக அஜீத் அவர்கள் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். நேர்கொண்ட பார்வை படத்திற்கே ஐம்பது வாங்கினால் வலிமை படத்திற்க்கு அதிகமாக இருக்குமென அனைவரது மத்தியிலும் தோன்றியுள்ளது.
தற்பொழுது கொரோனா வைரசினால் திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டு வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்கள் சம்பளத்தை குறைபார்களா, இல்லை குறைக்க மாட்டார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.