சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்பொழுது சினிமாவையும் தாண்டி தனக்கு பிடித்தமான வேலைகளை அவ்வப்போது செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்பொழுது அடுத்த படத்தில் கமிட் ஆகாமல் தற்போது இந்தியாவை சுற்றி பயணம் மேற்கொண்டு வலம் வருகிறார்.
அஜித் சாதாரணமாக ஒரு போட்டோ போட்டாவே தல ரசிகர்கள் கொண்டாடுவார்கள் தற்போது அஜீத் முக்கிய இடங்களில் அமர்ந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் இணைய தளத்தில் பதிவிட்டு வருகிறார்.அதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இது இப்படி இருக்க இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அஜித் பைக்கை மையமாக வைத்து எடுத்து இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து வில்லன் கார்த்திகேயா, ஹீமா குரேஷி போன்ற டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களை உற்சாகப்படுத்த அவ்வப்போது அப்டேட்களை கொடுத்து வருவதால் இரட்டிப்பு சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர். வாகா எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்த போது புகை படம் எடுத்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து பாலைவனம், மலை உச்சி ஆகிய இடங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டதை தொடர்ந்து தற்போது பாலைவனம் ஓரத்தில் இவர் பைக்கை ஓட்டிக்கொண்டு சென்ற வீடியோ இணையதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
#AjithKumar offroading! pic.twitter.com/Aiq20mHZ4v
— Suprej Venkat (@suprej) October 27, 2021