நடிகர் அஜித்குமார் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியதால் சுமாரான வசூலை அள்ளியது. இதை அஜித்தும் ஹெச் வினோத்தும் நன்கு உணர்ந்துவிட்டனர். இதனால் அடுத்த படம் எந்த குறையும் இருக்கக்கூடாது மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாற வேண்டும் என்பதற்காக ஹெச் வினோத் யாரு சொன்னாலும் எதையும் கேட்காமல் படத்தை தனக்கு பிடித்த மாதிரி எடுக்க முடிவு செய்துள்ளாராம்.
முதல் கட்ட ஷூட்டிங்கிலேயே 80% படப்பிடிப்பு முடிந்து விட்டதாம் இதில் பெரும்பாலும் அஜித்தை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டதால் பின்பு அஜித் லண்டன் பக்கம் சுற்றுலா பயணம் மேற்கொண்டார். அதனால் மீதி இருக்கும் நடிகர் நடிகைகளை வைத்து காட்சிகளை எடுத்ததாக சொல்லப்படுகிறது. ஒரு வழியாக இரண்டாவது கட்ட ஷூட்டிங் பூனேவில் தொடங்கப்படுகிறது.
அஜித்தை வைத்து இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டும் என்பதற்காக அஜீத் தற்பொழுது சென்னை திரும்பி உள்ளார். ஆனால் படத்தில் நடிப்பதற்கு முன்பாக அவர் தனது உடம்பை மீண்டும் சற்று குறைக்க முடிவு எடுத்துள்ளாராம் ஏனென்றால் அஜித் இந்த திரைப்படத்தில் சற்று ஸ்லிம்மாகத்தான் நடிக்கிறார். அதனால் திரும்பவும் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொண்டு நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
அதனால் முதல் இரண்டு வாரம் ஜிம் வொர்க் அவுட் செய்து உடலை குறைத்த பின் அடுத்ததாக புனே கிளம்பி அங்கு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் அஜித் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார் ஆனால் இப்பொழுது இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் அஜித் சற்று இளமையான கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.
ஏகே 61 படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், தெலுங்கு பட நடிகர் அஜய், ஜான் கொக்கேன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. படபிடிப்பு முற்றிலும் முடிவடைந்து டிசம்பரில் இந்த படம் வெளிவர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இந்த படம் நிச்சயம் அஜித்திற்கும் சரி இயக்குனர் வினோத்துக்கும் சரி மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாக மாற உள்ளதாக கூறப்படுகிறது.