கண்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராயை அப்பொழுதே ஓரம் கட்டிய அஜித்.! தலனா சும்மாவா..

ajith

நடிகர் அஜித் தற்பொழுது தன்னுடைய 62வது திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவராமல் இருந்து வரும் நிலையில் ஏகே 62 படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்து வருகின்றனர்.

நடிகர் அஜித் நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய சூப்பர் ஹிட் பெற்ற திரைப்படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சியில் அஜித் ஐஸ்வர்யாராயுடன் நடிக்க மறுத்துள்ளார். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித்துடைய நடிப்பில் கடைசியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து லைகா நிறுவன தயாரிப்பில் ஏகே 62 திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குவார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளிவராத நிலையில் இதற்கிடையில் ரஜினியின் தலைவர் 170 அப்டேட்டை லைகா நிறுவனம் நேற்று வெளியிட்டது.

நடிகர் அஜித் ராஜு மேனன் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்றது.

kandukonden kandukonden
kandukonden kandukonden

இந்த படத்தில் அஜித் ஜோடியாக முதலில் ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க இருந்ததாம் ஆனால் அஜித் தான் அதற்கு நோ சொன்னதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ஐஸ்வர்யா ராய் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் தனக்கு ஜோடியாக அஜித் நடிக்க வேண்டும் என்றால் தாடி இருக்கக்கூடாது என கண்டிஷன் போட்டுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா ராயின் கண்டிஷனுக்கு அஜித் கட்டுப்படாத காரணத்தினால் அது எல்லாம் முடியவே முடியாது எனக்கு ஐஸ்வர்யா ராய் முக்கியம் இல்லை தாடி தான் முக்கியம் என கூறியுள்ளார்.

இவ்வாறு உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்ற பெருமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இவருடன் நடிக்க பல நடிகர்கள் ஆசைப்பட்டாலும் கூட அஜித் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இந்த படத்தில் தபுவை உருகி உருகி காதலிக்கும் காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.