தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியினை கண்டு வருகிறார்.
இவ்வாறு தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக விளங்கிவரும் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து அஜித் நடிப்பில் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் ரஜினி நடிப்பில் எந்திரன் படம் உருவான நிலையில் இந்த படத்தில் நடிகர் அஜித் நடிக்க மறுத்துள்ளார் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது ஷங்கர் அஜித்தை வைத்து எப்படியாவது ஒரு படத்தினை உருவாக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வரும் நிலக்கில் ஜீன்ஸ் படத்தில் இருந்தே இருவரும் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டு வருகின்றனர் ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இவர்களால் இணைய முடியவில்லை.
அந்த வகையில் இயக்குனர் சங்கர் அஜித்தை மனதில் வைத்து எழுதிய படம்தான் எந்திரன். இந்த கதையை அஜித்திடம் கூற அதற்கு அவர் இந்த பிரம்மாண்டமான உயர்நிலை தொழில்நுட்பம் இதெல்லாம் வேண்டாம் ஒரு சாதாரணமான படத்தில் நடித்துவிட்டு போனால் அதுவே போதும் அப்படித்தான் இதுவரையிலும் நடித்து வருகிறேன் என கூறினாராம். மேலும் இதனால் அந்த கதை எனக்கு செட்டாகாது என தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இந்த படத்தினை பற்றி கூற ரஜினிக்கு இந்த படம் பிடித்த போக பிறகு எந்திரன் படம் உருவாகியுள்ளது.