Ajith : தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்கவைத்துகொண்டு ஓடுகிறார் இவர் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும், ஒரு குட்டி கதை சொன்னது பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில்.. இந்த போட்டியில் நடிகர் ரஜினியும், விஜயும் தான் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அஜித் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம், ரசிகர் மன்றம் வேண்டாம், போஸ்டர் அடிக்க வேண்டாம் என்று எந்த ஆசையும் இல்லாமல் இருக்கிறார் என்று நிருபர் தெரிவித்தார்.
அதனை மறுத்த பிஸ்மி எந்த பட்டமும் வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை அதேபோல சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது அவருக்கு ஆசை இல்லாமலும் இல்லை ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டவர் தான் அஜித் அடுத்த சூப்பர் ஸ்டார் நானாக இருந்தால் என்று ஒரு முறை அவர் கேள்வி கேட்டிருக்கிறார்.
அந்த காலத்தில் அஜித் ஒரு பேட்டி கொடுத்ததால் முழுவதும் சர்ச்சையாக தான் இருக்கும் யாரைப் பற்றி கேள்வி கேட்டாலும் சகட்டுமேனிக்கு அவர் வாயில் இருந்து கமெண்ட் வரும் பயங்கரமாக லூஸ் டாக் விடுவார்.
மறைமுகமாக இருந்த விஜய் அஜித் போட்டி நேரடி தகராறாக மாறியதே அஜித் கொடுத்த பேட்டிகளால் தான் ரொம்ப ஓபனா கடுமையா பேசுவார் அதே போல அட்டகாசம் படத்தில் வரும் இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன என்ற பாடலில் விஜயை நேரடியாக தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வைத்ததுதான் பாடல் முழுவதும் உனக்கென்ன உனக்கென்ன என்று விஜய் தான் கூறியிருப்பார்.
அதன் பிறகு தான் அஜித் ரியாலிட்டியை புரிந்து கொண்டார் இந்த பட்டம் பேப்பர் எல்லாம் ஒன்றுமே இல்லை என்ற பக்குவம் வந்துவிட்டது இப்பொழுது எதுவுமே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார் ஆனாலும் அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று பிஸ்மி பேட்டியில் தெரிவித்தார்.